BAN.. "ரசாயன வேதிப்பொருள் கலப்பு" எதிரொலி..  தமிழகம் முழுவதும் பஞ்சுமிட்டாய்க்கு தடை!

Feb 17, 2024,09:03 PM IST

சென்னை: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன வேதிப்பொருள்கள் கலக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


பஞ்சு மிட்டாயை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குட்டிக் குழந்தைகள் முதல்  பல் போன தாத்தா, பாட்டீஸ் வரை அத்தனை பேருக்கும் பிடித்த சுவையான ஒரு தின்பண்டம்தான் பஞ்சு மிட்டாய். ரோஸ் கலரில் பொசுபொசுவென இருக்கும் பஞ்சு மிட்டாயைப் பார்த்தாலே வயது மறந்து குழந்தையாகி டக்கென வாங்கி வாயில் வைத்து அது கரைவதை கண் மூடி சிலாகித்து சுவைப்பவர்கள் பலர்.


பஞ்சு மிட்டாயை சுவைத்து சாப்பிடுவதே ஒரு தனிக் கலைதான். கோவில் திருவிழாக்கள், கடற்கரைச் சாலை, சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில்  பஞ்சுமிட்டாய் விற்பனை எப்பொழுதும் விறுவிறுப்பாக நடைபெறும். குழந்தைகளை கவரும் விதத்தில், பல வண்ணங்களில் காட்சி அளிக்கிறது இந்த பஞ்சு மிட்டாய்.




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்  வசீகரிக்கும் தன்மை கொண்டது  பஞ்சு மிட்டாய். குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்கில், பெரியோர்களும்  இதை வாங்கி உண்டு மகிழ்வதும் உண்டு.  பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்று சினிமாவில் பாடலே வைத்தார்கள் நம்ம கவிஞர்கள். அந்த அளவுக்கு பஞ்சு மீது மக்களுக்கு தனி மோகம் இருந்தது.. இன்றோ அதில் நஞ்சு கலந்து விட்டது.


கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் நடந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் பஞ்சு மிட்டாயில் அபாயகரமான வேதிப் பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரோடமின் பி என்ற  வேதிப்பொருள் இருப்பதும், அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டதும் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து  

புதுச்சேரியில் அதன் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயிலும் நஞ்சுப் பொருள் கலந்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இங்கும் அதன் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


டிவியில் - சினிமாவில் இனிமேல் நெப்போலியனும், குஷ்புவும் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாட்டுப் பாடும்போது அதைப் பார்த்து ரசிப்பதோடு நாம நிறுத்திக்கணும்.. பஞ்சு மிட்டாயை மறந்தும் சாப்பிட்டு விடக் கூடாது.!

சமீபத்திய செய்திகள்

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்