சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளை (IAS/IPS) எழுத ஆயத்தமாகி வருபவர்களுக்கு முதன்மைத் தேர்வு (primary exam), முதல் நிலை தேர்வு (first level exam), மாதிரி ஆளுமை தேர்வு (sample personality test), ஆகியவற்றுக்காக தமிழக அரசு இலவச பயிற்சியை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் வழங்கப்படவும் உள்ளது.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு மையம் சென்னையில் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் இங்கு மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. தகுதியானவர்களுக்கு ஜூலை 5 மற்றும் 6 தேதி அட்மிஷன் நடைபெறுகிறது. இதில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு நாளை முதல் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தகுதியானவர்களுக்கும் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமின்றி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற விண்ணப்பதாரர்களும் இந்தப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இந்த பயிற்சி மையத்தில் மூன்று மாத காலம் பயிற்சி பெறுபவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் ரூபாய் 25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் என்ன தாமதம், உடனடியாக விண்ணப்பியுங்கள், பயன் பெறுங்கள்.
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு
Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
பெண்களுக்கு பலம் தரும்.. கருப்பு உளுந்தங்கஞ்சி .. வரலாறு கூறும் சமையல் (பகுதி 4)
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
வலி!
{{comments.comment}}