சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் 9 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
திமுக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்புகளில் ஒன்று இந்த பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் நிறுவுதல் ஆகும். அதன்படி தற்போது 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம் என்பது கூடுதல் செய்தியாகும்.
அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வசதியைப் பெற விரும்புவோர், இதுதொடர்பாக 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் http://tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை நிமித்தமாக சொந்த வீட்டை விட்டு வெளியூர் வந்து பணியாற்றும் மகளிருக்கு இது மிகப் பெரிய உதவியாக அமையும். அரசே நடத்தும் விடுதி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதால் வேலை பார்க்கும் பெண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பலன் அடையலாம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}