சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் முன் கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட துவங்கி விட்டார்கள்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோரின் வசதிக்காக ஏற்கனவே பல சிறப்பு ரயில்களை சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஜனவரி 06ம் தேதியான இன்று துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசும் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் பணியாற்றுபவர்களின் வசதிக்காக ஜனவரி 10,11,12,13 ஆகிய நாட்களுக்கு 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8368 பஸ்களுடன் இந்த குறிப்பிட்ட நாட்களில் கூடுதலாக 5736 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதனால் மொத்தமாக 14,104 சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விடுமுறைகள் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவிலான சிறப்புப் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்தப் பேருந்துகளுக்கு நல்ல மவுசும் உண்டு. தற்போதும் அதேபோல சிறப்பு்ப பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து இவை இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}