சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கடைசியாக கடந்த ஜூன் 20ம் தேதி கூடியது. அப்போது, மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல், அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம் அமைச்சர்களின் பதிலூரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 20ம் தேதி தொடங்கி கூட்டம் ஜூன் 29ம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் அமளி செய்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ம் தேதி கூட உள்ளதாக சபாநயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும் என்றும், சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் குழு ஆய்வு கூட்டம் முடிவு செய்யும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
டிசம்பர் 9ம் தேதி, திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன்.. ரூ. 3000 ரொக்கமும் தரப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}