குடையோடு போங்க மக்களே.. தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Mar 17, 2025,02:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கோடை காலம் துவங்கி விட்டது போல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்குமோ என புலம்பி வருகின்றனர். இதற்கிடையே கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பூமத்திய ரேகை மற்றும் அதனை ஒட்டிய வடஇந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. 


குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழகம், டெல்டா மாவட்டங்கள், மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 13 ஆம் தேதியிலிருந்து மீண்டும் வெயில் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெக்கை அதிகரித்துள்ளது.




இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அதன்படி, தமிழக பகுதிகளின்  மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 


மேலும், இன்று முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்