திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Jan 28, 2026,05:49 PM IST

சென்னை: திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் உபரி நிதி ரூ.40 கோடியில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்து திமுக அரசின் கொள்ளையைத் தடுத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.




திருக்கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாகக் குறைந்துள்ளது தெய்வக்குற்றமாகும் என்று சரியாகச் சுட்டிக்காட்டியதோடு, கோயிலைத் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று திமுக அரசுக்கு சவுக்கடியும் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.


அறங்காவலர் குழுவே இல்லாமல் கோயிலை நிர்வகிப்பதில் தொடங்கி கமிஷன் பெறும் நோக்கில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட முயற்சிக்கும் அறிவாலய அரசு, ஆட்சி முடியும் தருவாயிலாவது திருந்துமா என்பது கேள்விக்குறியே! கோயில் சொத்து கோயிலுக்கே என்பதை உணராமல், உண்டியல் தொகையில் கல்லா கட்டப் பார்க்கும் திமுக அரசு தனது பேராசையாலேயே அழியும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்