- ஜெனிட்டா ரீனா
வணிக நோக்கத்துடன் வந்த ஆங்கிலேயர் பின் நம் இந்திய தேசத்தை முழுவதுமாக கைப்பற்றி ஆண்டு நம் நாட்டு வளங்களை கொள்ளையடித்தனர். இதனால் விடுதலைப் போராட்டமும் நாடெங்கும் நிகழ்ந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி இக்கட்டுரையில் காண்போம். 151 தமிழக விடுதலை வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்; தங்கள் இன்னுயிரையும் ஈந்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனே 1790 ஆம் ஆண்டு வெள்ளையரின் கொடுமையை எதிர்த்து முழக்கம் செய்தார். தொடர்ந்து ஊமைத்துரை, வேலுநாச்சியார், மருதுபாண்டியர், புலித்தேவன் எனப் பலரும் வெள்ளையரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்தனர். வரிகேட்டுத் தொல்லை செய்த வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவர்களில் புலித்தேவன் முதன்மையானவர்.
தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்படுபவர் வ.உ. சிதம்பரனார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசக் கப்பலை ஓட்டினார். இதனால் கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்பட்டார்.

பாரதியார் தன் பாடல், கவிதைத் திறத்தால் நாட்டு மக்களுக்கு நாட்டுப்பற்று ஊட்டி அச்சம் தவிர்த்து நாட்டுக்காய் போராட வழிகாட்டியவர். இவருடைய...
கவிதைகள் விடுதலைப் போராட்ட காலத்தில் மக்கள் மனதில் தேசிய உணர்வை ஊட்டியதால் தேசியகவியாக போற்றப்படுகிறார். இந்திய பத்திரிகை மூலம் விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை எழுதினார். இதைக் கண்ட ஆங்கிலேய அரசு பத்திரிகைக்குத் தடை விதித்தது. இவர் சுதந்திரம் அடையும் முன்னரே சுதந்திர தாகத்தையும், சுதந்திர மகிழ்வையும் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" பாடி வெளிப்படுத்தினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது. தமிழகத்தில் வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, கடலூர் அஞ்சலையம்மாள், இலட்சுமி சாகல், லீலாவதி அம்மையார் போன்ற பலரது பங்களிப்பு அளப்பரியது.
லீலாவதி அம்மையார் சுதேச இயக்கம் என்ற கொள்கையைக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கதர் ஆடை அணிந்ததால் மூன்று முறை சிறைக்குச் சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியாருக்கு உரியதாகும்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் பல விடுதலை வீரர்களும் உள்ளனர்.
கல்கி தி. சதாசிவம், அண்ணல் தங்கோ, திண்டுக்கல் மணிபாரதி, தீரர் சத்தியமூர்த்தி,நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, மதுரை ஜார்ஜ் ஜோசப், வீரன் வாஞ்சிநாதன், எம். பக்தவத்சலம், எஸ். என். சுந்தராம்பாள், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கு. காமராசர், கே. பி. சுந்தராம்பாள், சுத்தானந்த பாரதி, சுப்பிரமணிய சிவா, செல்லம்மா பாரதி, திருப்பூர் குமரன், திரு. வி. கல்யாண சுந்தரனார், தீரன் சின்னமலை, பி. கக்கன், மருதநாயகம், ம. சிங்காரவேலர், முத்துலட்சுமி ரெட்டி, முஹம்மது இஸ்மாயில், ராஜாஜி, பெரியார், ஜி. சுப்பிரமணிய ஐயர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், என் சங்கரய்யா என மொத்தம் 151 பேர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள் ஆவர். சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது.
இந்திய விடுதலைப் போருக்கு களம் அமைத்துக் கொடுத்த பெருமை தமிழகத்தையே சாரும். இந்திய விடுதலைப் போரில் சிதம்பரனார் சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கி இந்தியாவிற்கே வழிகாட்டினார். வ.வே.சு. ஐயர் புரட்சிப் படையை உருவாக்கி துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தார். பாரதியார், காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் விடுதலைப் போரில் ஈடுபட்டு இந்தியாவிற்கே வழிகாட்டினர்.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}