இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

Apr 07, 2025,05:39 PM IST

சென்னை: ஏப்ரல் மாதத்தில் வழக்கமாக நிலவும் கடும் வெயில் இல்லாமல், இந்த கோடை காலம் குளுமையாக இருக்கும்‌. ‌ அடுத்த 10 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும். வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். சென்னையில் திடீரென மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும் மிக கனமழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. 




மதுரையில் சூறக்காற்றுடன் கனமழை


நேற்று இரவு மதுரையில் சூறைக்காற்றுடன் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அதேபோல் கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது. 


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வெறும் 300 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதிகளில் அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரித்தால், மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதே சமயத்தில் ஏப்ரல், மே கோடை காலங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் கூறப்பட்ட நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்ற அபாயம் நிலவி வந்தது. தற்போது பெய்து வரும் மழையால், அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு நீர் இருப்பு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு இதே நிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,


ஏப்ரல் மாதத்தில் கடும் உஷ்ணமாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி இல்லாமல் கோடை காலம் குளுமையாக இருக்கும், அடுத்த 10 நாட்களுக்கு இதே போக்கு தொடரும். மழை பெறுவதில் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது, ஏனெனில் மழை தொடர்ந்து வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இன்னும் முடிவடையவில்லை. அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கின்றோம்.


இன்றும் தமிழகம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும். சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி (உள்பகுதிகள்), சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் பலத்த மழை பெய்யும். 


ஏப்ரல் 9-11 ஆம் தேதிகளில் சென்னைக்கு திடீர் திடீரென மழை பெய்யும். இதனால் தொடர்ந்து மிகவும் ஈரப்பதமாக இருக்கும் என கூறியுள்ளார் .

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்