சென்னை: வட தமிழ்நாட்டில் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதே சமயத்தில் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.
இதற்கிடையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வட தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
ராயலசீமா, கர்நாடகத்தின் உட்புறப் பகுதிகளிலிருந்து வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று வடக்கு தமிழ்நாட்டிற்குள் வீசும். இந்த காற்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மேற்கு உட்புற சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை அடையும். அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக - வெள்ளி மற்றும் சனிக்கிழமை மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும்.
சென்னை மீனம்பாக்கத்தில் ஆண்டின் முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யக்கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}