துபாய்: தமிழக வரலாற்றாய்வாளர் கீழக்கரை ச.சி.நெ. அப்துல் றஸாக், தான் எழுதிய ஆட்சி பீடம் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் வரலாற்று முதல் மற்றும் இரண்டாம் பாகம் நூல்களை துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு, அன்பளிப்பாக வழங்கினார். இந்த நூல்களை நூலக அதிகாரி முஹம்மது பெற்றுக் கொண்டார்.
நேற்று உலக நூலக தினம் என்பதால் அதையொட்டி, துபாய் நகரில் மிக பிரம்மாண்டமான நூலகத் திருவிழா முகமது பின் ராஷித் நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கீழக்கரை முஹம்மது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது தமிழக வரலாற்றாசிரியர் அப்துல் றஸாக் அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களும் பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து வரலாற்றாய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக் கூறுகையில், துபாய் நகரின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் இத்தகைய பிரமாண்ட நூலகத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் தமிழ் நூல்களும் இடம் பெற வாய்ப்பளித்திருப்பதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் மொழி தோட்டம் என்ற இடத்தை ஏற்படுத்தி அதில் ஆட்சியாளரின் பொன்மொழிகள் உலகின் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற செய்திருப்பதன் மூலம் தமிழ் மொழிக்கு துபாய் நகரம் அளித்து வரும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}