ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழ் புதல்வன் திட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Jun 14, 2024,06:49 PM IST

சென்னை: தமிழ்புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் 

முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 




பள்ளி மாணவர்களை பார்க்கும் போது என் இளமை திரும்புகிறது. ஒரு அரசியல்  விழாவில்  முப்பெரும் விழாக்கள் நடைபெறும். ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்  ஐம்பெரும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.  


படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என்று ஒருவரை பார்த்து நினைக்கக்கூடாது. கல்விதான் உண்மையான பெருமையான அடையாளம் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கான திட்டங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். தொடர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீட் போன்ற மோசடிகளை எதிர்க்கிறோம். அதற்கு ஒரு நாள் முடிவு கட்டுவோம். நீட் தேர்வு மோசடி என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடு தான். தற்பொழுது ஒட்டு மொத்த நாடும் கூறுகிறது.


காலை உணவு திட்டமும் விரிவாக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 25 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெருகின்றனர்.போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல சமூக ஒழுங்கு பிரச்சனை. போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகள் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இந்த மானியம்  வழங்கப்படும். 


புதுமைப்பெண் திட்டத்தை பலரும் பாராட்டுகின்றனர். அதே போல தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும்.இந்த தொகை இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை வழங்கப்படும். 


உலக அளவில் சவால் விடும் வகையில் தமிழ் மாணவர்கள் வளர வேண்டும் என்பது என்ன ஆசை. காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பள்ளிகளில் 21,000 ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. அதில், 600 ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. படிங்க படிச்சுக்கிட்டே இருங்க படிப்பு ஒன்று தான் யாராலும் பறிக்க முடியாது. அறிவியல் வளர்ச்சி அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி பேசுபொருள் ஆகி உள்ளது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்