கலிபோர்னியா: அமெரிக்காவின் பிரபலமான அமெரிக்கா ஹாஸ் காட் டேலன்ட் நிகழ்ச்சியில், தமிழில் பல வருடங்களுக்கு முன்பு ஹிட்டடித்த, நாக்கு முக்க பாடல் ஒலித்து அரங்கத்தையே அதிர வைத்து விட்டது.
இந்தியாவைச் சேர்ந்த வி அன்பீட்டபிள் நடனக் குழுவினர்தான் இந்த தமிழ்ப் பாடலுக்கு நடனமாடி அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தி விட்டனர். இப்படி ஒரு அதிரடியான பீட்டில் ஒரு தமிழ்ப் பாடலா என்று அவர்களுக்கு பெரிய சர்ப்பிரைஸ் ஆகி விட்டது.

2007ம் ஆண்டு வெளியான, காதலில் விழுந்தேன் படத்துக்காக விஜய் ஆண்டனி இசையமைப்பில் உருவான பாடல்தான் இந்த நாக்கு முக்க.. மிகப் பெரிய அளவில் இளைஞர்களைக் கட்டிப் போட்டு ஆட்டம் காட்டிய பாடல் இது. இந்தப் பாடலைத்தான் இப்போது அமெரிக்காவில் அதிர விட்டுள்ளனர் வி அன்பீட்டபிள் குழுவினர்.
'America's Got Talent: Fantasy League 2024' டேலன்ட் நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து வி அன்பீட்டபிள் குழு பங்கேற்றுள்ளது. இந்தக் குழுவினர், தங்களுக்கான நிகழ்ச்சியின்போது நாக்கு முக்க பாடலுக்கு நடனமாடினர்.
மும்பையைச் சேர்ந்த நடனக்குழுதான் இந்த வி அன்பீட்டபிள். சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது இந்தக் குழு. 2019ம் ஆண்டு இந்த நடனக் குழுவுக்கு சர்வதேச கவனிப்பு கிடைத்த நிலையில், 2020ம் ஆண்டு, 'America's Got Talent: The Champions' போட்டியில் பட்டம் கிடைத்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது 'America's Got Talent: Fantasy League' போட்டியில் அவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜனவரி 1ம் தேதி இந்த நிகழ்ச்சியில் அவர்களது நடனம் இடம் பெற்றது. இப்போது இந்த நடன நிகழ்ச்சி அடங்கிய வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}