தமிழ்த் தாய் வாழ்த்தில் குளறுபடி.. கவனச் சிதறலால் நடந்த தவறு.. மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

Oct 18, 2024,06:55 PM IST

சென்னை: டிடி தமிழ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தில் குளறுபடி செய்தமைக்காக மன்னிப்பு கேட்டுள்ளது டிடி தமிழ் நிறுவனம்.


சென்னை தொலைக்காட்சியான டிடி தமிழ் நிறுவனத்தில் இன்று இந்தி மாத நிறைவு விழா நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 3வது வரியை முழுமையாக பாடாமல்  விட்டு விட்டு அடுத்த வரியைப் பாடியுள்ளனர் பாடலைப் பாடியவர்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசையும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டிடி தமிழ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




இந்தி மாத நிறைவு விழா மற்றும் தூர்தர்ஷன் சென்னையின் பொன் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பித்தார்.  விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, தவறுதலாக ஒரு வரி விடுபட்டு விட்டது. கவனச் சிதறல் காரணமாக ஏற்பட்ட தவறு இது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கோரிக் கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடல் பாடியவர்களிடம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

news

நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்

news

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

news

திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்

news

ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!

news

முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!

news

2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?

news

திருச்சியில் எம்ஜிஆர்.. நாகையில் அண்ணா.. திராவிட சென்டிமென்டை கையில் எடுக்கும் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்