சென்னை: நடபாண்டின் இறுதி சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்துடன் தொடங்கியது.
2024-25 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் 19ஆம் தேதி பொது பட்ஜெட்டும், இருபதாம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த இரண்டு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் 29ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைந்தது. விதிகளின்படி அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டமன்றம் கூட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

சட்டசபை இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியதும், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2023- 24 ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் தனித் தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
அஜித்தை அடுத்து இயக்க போவது இவர் தானாமே...கதையையும் இப்பவே சொல்லிட்டாரே
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!
துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்
சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!
{{comments.comment}}