சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலேயே நிலவ கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் தற்போது முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயில் சீசன் தூங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்தால் ஏப்ரல் மே மாதங்களில் கொடூரமாக வெயிலின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவினாலும் கூட பிற்பகலுக்குப் பிறகு வெயில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிகக்கூடும். ஒரு சில இடங்களில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
14.2.25 முதல் 17.2.25 வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.
சென்னை வானிலை:
சென்னையில் இன்று அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.
13.2.25 தேதி நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}