சென்னை: தங்கம் விலை நேற்று உயர்ந்து இருந்த நிலையில், இன்று விலை குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே உள்ளது.
நாட்டில எல்லா விலைவாசியும் தாறுமாறாதான் ஏறிக்கிட்டிருக்கு. சரி தங்கம் விலை எப்படி இருக்கும்னு ரேட் பட்டியலை எட்டிப் பார்த்தா... அட ஆமாம் மக்களே தங்கம் விலையும் குறைந்திருக்கு. அதுவும் தை மாத்தில் தங்கம் விலை குறைந்திருப்பது "மெடிக்கல் மிராக்கிள்"தான். அப்பாடா என்று சொல்லும் அளவுக்கு கொஞ்சம் நல்லாவே விலை குறைஞ்சிருக்குங்க.
இந்த மாதம் கல்யாண முகூர்த்தம் வேற நிறைய இருக்கும் என்பதால், தங்கம் விலை குறைவு அனைத்து தரப்பிரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகை கடைகளிலும் கூட்டம் சற்று அதிகமாக தான் உள்ளது.

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5870 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46960 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6404 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 21 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.51232 ஆக உள்ளது.
வெள்ளியும் குறைஞ்சிருக்கு மக்களே
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 77 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 616 காசாக உள்ளது. 10 கிராம் வெள்ளியின் விலை ரூ. 770 ஆக இருக்கிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொளத்தூரில் காட்டிய வீரியத்தப் பார்த்துமா இப்படிப் பேசுகிறீர்கள்.. திமுகவுக்கு முதல்வர் விஜய் பதிலடி
திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!
பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க - மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}