தமிழக அமைச்சரவையில் இன்று மாலை அதிரடி மாற்றம்.. இலாக்காக்களும் மாறுதாம்!

Aug 22, 2024,11:23 AM IST

சென்னை : தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாதம் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய அமைச்சர்கள் நாளை கவர்னர் மாளிகையில் பதவேற்றுக் கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் வர உள்ளதாக கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரங்களில் பரவலாக தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள புதிய தகவலின் படி, ஒரு மூத்த அமைச்சர் மற்றும் 2 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக மூன்று புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு தமிழக அமைச்சரவையில் பலரது இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.



சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது அமைச்சர்களாக இருக்கும் காந்தி மற்றும் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் ஆகிய இருவரில் ஒருவரது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட உள்ள 3 அமைச்சர்களும் நாளை (ஆகஸ்ட் 23) கவர்னர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியில் அமர்த்தப்படலாம் என்ற செய்தி தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கிறது. எனவே இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது அது நடக்குமா என்ற எதிர்பார்ப்பிலும் திமுகவினர் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்