சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ. 48 கோடி மதிப்பில் 64 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்யவுள்ளது தமிழ்நாடு அரசு.
பொதுவாகவே ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மகள்களின் திருமண செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருமணத்திற்கு தேவையான திருமாங்கல்யம் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் அவதிக்குள்ளாவோர் பலர் உள்ளனர். திருமண சடங்குகளில் திருமாங்கல்யம் என்பது இன்றியமையாததாக கருதப்படுகிறது. திருமாங்கல்யம் அணிவது என்பது திருமண பந்தங்களில் ஒரு வழக்கமான சடங்காகவே செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மற்ற நகைகளும் கூட முக்கியமானதாக மாறியுள்ளது.
மறுபக்கம் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமணங்களை செய்வது பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. அன்றாட கூலி தொழிலாளர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பின் தங்கியவர்கள் என அனைவருக்கும் உதவும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் திருமண உதவி திட்டம். இத்திட்டம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் என பல திருமண உதவி திட்டங்கள் மூலம் ரூ. 50,000 வரை ரொக்க பணமும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருமண உதவி திட்டங்களுக்காக ரூபாய் 48 கோடி மதிப்பில் 64 கிலோ தங்கம் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. மேலும் எட்டு கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
{{comments.comment}}