சென்னை: வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை முழுவதும் நேற்று முன்தினம் மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது. இது தவிர தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து நேற்று தான் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 20ஆம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாம். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என கணித்துள்ளது.
இன்று மழை:
தமிழ்நாட்டில் சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திருப்பூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், கர்நாடகாவில் ஓரளவுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது . அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில்
அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரையிலான காலகட்டத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}