சென்னை: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவ மழை படிப்படியாக தீவிரமடைந்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அனேக இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வேளாங்கண்ணி, சீர்காழி, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வெயில் அடித்தாலும் மாலை இரவு நேரங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை மழை:

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில்,
இன்று அதிகாலை 6:00 மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, அண்ணா சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.
ஒரு சில இடங்களில் வானவிலும் தென்பட்டதால் மக்கள் அதனை ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன மழை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}