சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், 21 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி மேட்டூர் அணை, கே.ஆர்.பி அணையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 கன அடியை எட்டி உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
இன்று மிக கனமழை:
தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் 3 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கடலூர் அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
தேனி, திண்டுக்கல் கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, ஆகிய 9 மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}