மேகம் கருக்குது.. இன்று 10 மாவட்டங்களிலும்.. நாளை 14 மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு!

Oct 09, 2024,04:20 PM IST

சென்னை:   லட்சத்தீவு கேரளா மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களிலும், நாளை 14 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் அநேக இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது ‌. சேலம், திண்டுக்கல் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி ஆறு போல் ஓடியது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு திடீரென மிதமான மழை பெய்தது.


இதனிடையே லட்சத்தீவு கேரளா மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்று கனமழை:




கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மற்றும் திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை கன மழை: 


திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, மற்றும் கரூர் ஆகிய 14 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள்: 


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


அக்டோபர் 12.10.24:


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


அக்டோபர் 13.10.2024:


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 14.10.2024:


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும். மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்பதால் மீனவர்கள் அக்டோபர் 12ம் தேதி வரை இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?

news

திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்

news

கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி

news

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்

news

Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!

news

வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!

news

சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !

news

எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!

news

The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!

அதிகம் பார்க்கும் செய்திகள்