Rain Updates: டெல்டா, தென் மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கன மழைக்கான.. எல்லோ அலர்ட்!

Nov 05, 2024,03:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று, வரும் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்டா  மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை  விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் மாலை இரவு நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வரிசையில் வானிலை மையம் அறிவிப்பின்படி தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஐந்து நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, தூத்துக்குடி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.



இந்த நிலையில் தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதால், கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


இன்று கனமழை: 


நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


 8 ஆம் தேதி கனமழை:


தஞ்சை, நாகை, மயிலாடுதுறை,  திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஒன்பதாம் தேதி கனமழை: 


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,ராமநாதபுரம், தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


10 ஆம் தேதி கனமழை:


திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் எட்டாம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்