சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு- இலங்கை கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நெருங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தற்போது இது மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வருகிறது. இது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:

மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர்,திருவாரூர், கடலூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):
கடலூர்,மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய 11 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):
தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதி கனமழை:
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ஆகிய 21 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}