மக்களே கவனம் .. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும்.. ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கு!

Dec 11, 2024,10:08 AM IST

 சென்னை: வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி, படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரித்தது.  இதற்கிடையே வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிக கனமழை முதல் அதிக கன மழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள்,  அணைகள், நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து இதுவரை இயல்பை விட கூடுதலாக  14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.




இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு- இலக்கை கடற்கரையை நெருங்க இருக்கிறது. மேலும்  வலுவடைந்த இந்த காற்றழுத்தம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிறது.


இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் டிசம்பர் 11,12,13,16,17 ஆகிய  5 நாட்கள் ஒரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


விழுப்புரம் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்


வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அதிகாரிகள் தடைவித்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

news

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!

news

Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

news

தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?

news

"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!

news

சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

news

காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்