சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். பின்னர் டிசம்பர் 11ஆம் தேதி வாக்கில் தமிழக இலங்கை கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும் .இதனால் தமிழகத்தில் அனேக இடங்களில் நாளை முதல் நான்கு நாட்கள் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வடக்கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயலாக மாற வாய்ப்பில்லை
இதற்கிடையே, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலு இல்லாமல் காணப்படுவதால் புயல் உருவாக வாய்ப்பு என்பது மிக குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கை வடகிழக்கு பகுதியில் வரும்போது தான் நமக்கு மழை துவங்க ஆரம்பிக்கும். அதன் பிறகு மேற்கு நோக்கி தமிழகத்தை நோக்கி நகரும்போது செவ்வாய், புதன், வியாழன், ஆகிய மூன்று தினங்களில் தமிழாக கடலோரப் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். மேலும் இது தெற்கு நோக்கி நகரக்கூடும் என்பதால் வெள்ளிக்கிழமை தென் தமிழகப் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக வடக்கடலோர பகுதிகளான சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும். என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் கூட இது புயலாக மாற வாய்ப்பு மிக குறைவு என்றே குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், நல்ல மழை இருக்கும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 4 நாட்கள் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.மேலும் முறையான வழிகாட்டு விதிமுறைகளின்படி, பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனடியாக பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மை குழு தலைவர் ராஜேஷ் லக்கானி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தக்க ஏற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}