சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே விட்டுவிட்டு கன முதல் மிதமான மழை வரை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை தற்போதும் நீடித்து வருகிறது.
கிண்டி, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா, மந்தவெளி, மயிலாப்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை காணப்பட்டது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.

வட கடலோர மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் தென் மாவட்ட பகுதிகளில் பனி குறைந்தது மிதமான வெயிலுடன் வெக்கை நிலவி வருகிறது.
இதற்கிடையே தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவு வருகிறது.இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ஆந்திராவில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}