வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

Nov 23, 2024,05:39 PM IST

சென்னை:தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவானது. இதனால் நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வரும் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது தமிழ்நாடு- இலங்கை கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும்.இதன் காரணமாக  நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட மூன்று சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதேசமயம் சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட மூன்று சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் நாகை கடலோரப் பகுதி மீனவர்கள் அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிகாலையில் விழிப்பவரும்.. இளமையில் உழைப்பவரும்... முதுமைக்கு முன் சேமிப்பவரும்!

news

சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

பொங்கல் பண்டிகை...சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.05 லட்சம் பேர் பயணம்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்