சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குவியும் விண்ணப்பங்கள் :
எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த பிறகு தமிழகத்தில் 97 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, புதிய வாக்காளர்களாகத் தங்களை இணைத்துக் கொள்ள மொத்தம் 11,71,606 பேர் விண்ணப்ப மனுக்களை அளித்துள்ளனர். குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 4.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெயர் சேர்க்கை ஒருபுறம் தீவிரமாக இருக்க, மற்றொரு புறம் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கவும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சுமார் 19,566 பேர் பெயர் நீக்கம் கோரி மனு அளித்துள்ளனர். இது தவிர, முகவரி மாற்றம், புகைப்படத் திருத்தம் மற்றும் பிழை திருத்தங்களுக்காகவும் கணிசமான அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த முறை 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள் ஆன்லைன் மற்றும் சிறப்பு முகாம்கள் வாயிலாக அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLO) கள் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 2026 ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 'Voter Helpline' செயலி அல்லது 'voters.eci.gov.in' என்ற இணையதளம் வாயிலாகவும் தங்கள் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}