சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு, தெற்கு மற்றும் உள்புற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறையக் கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் புழுக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெயில் சற்று குறைய கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வளிமண்டல மேலடுக்கு தாழி கீழே இறங்குவதால் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் மழை பெய்யும். இதனால் தமிழ்நாட்டின் உட்புறம் மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலையில் சிறிது குறைவு காணப்படும்.
கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை தொடர்ந்து ஈரப்பதமாக இருக்கும், வெப்பநிலை சுமார் 33-35 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். பெங்களூருவிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யும் என கூறியுள்ளார்.
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}