Weather update: தமிழ்நாட்டில் நேற்று போலவே.. இன்றும் வெப்பநிலை அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

Mar 28, 2025,05:15 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்றும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சதத்தை தாண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்‌. இதே போலத்தான்  இன்னும் பத்து நாளைக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று மட்டும் சென்னை, வேலூர், சேலம், கரூர், ஈரோடு, திருப்பத்தூர், திருத்தணி, மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக வேலூரில் அதிகமட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட்  வெயில் பதிவாகியுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். அதன்படி


தமிழ்நாட்டிற்கு இன்னொரு மோசமான நாள் இன்று.வேலூரில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்த நிலையில் ,மீண்டும் இன்றும் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சென்னை மீனம்பாக்கத்திலும் அதிகபட்சமாக 101.6 டிகிரி பதிவாகும். 

அதே நேரத்தில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் 102.2  டிகிரி ஃபாரிஹீட்டை ஐ நெருங்கலாம்.


மதுரையில் சுமார் 102.2°பாரன்ஹீட்டும், சேலத்தில்  100.4 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும். கரூர் மற்றும் ஈரோட்டில் 102.2° பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சதத்தை தாண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்