சென்னை: காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதிகளில் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை மிதமான மழையாகவே பெய்து வந்தது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எந்த எந்த மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பெல்ட்கள் போன்ற பகுதிகளில் இன்று அதிகமான மழையை எதிர்பார்க்கலாம். வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை பலத்த மழை பெய்யும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பதிவாகி உள்ளது. மற்றபடி மழை விட்டு விட்டு தொடரும். வழக்கமான பருவ மழையாகவே இது இருக்கும். எனவே இதனை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}