தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

Mar 11, 2025,05:18 PM IST

சென்னை: தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் ஓரளவு  மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 


இந்த நிலையில் தமிழகத்திற்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 


கடந்த ஆண்டைப் போல கோடை காலங்களில் முற்றிலும் வறண்டு போகாமல் மழை பெய்து வருவது இதன் தனிச்சிறப்பு. ஏனெனில் கடந்த ஜனவரி மாதம் 13 மற்றும் 15 தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழகம், டெல்டா பகுதிகள் மற்றும் தெற்கு தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் ஜனவரி 18, 19 தேதிகளில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென் தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் லேசான மழையும், பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையும் பதிவாகி இருந்தது.


இந்த நிலையில் தற்போது மார்ச் 11 மற்றும் 12 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்.


சென்னை மழை: 




இன்றும் நாளையும் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரளவு மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, முதல் வேலூர் பெல்ட் வரை மதியம் முதல் இரவு வரை ஓரளவு மழை பெய்யும். இதனால் உங்கள் ரெயின் கோட் மற்றும் குடையை எடுத்துச் செல்லுங்கள்.. 


கனமழை:


தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரிக்கும். நீர்வீழ்ச்சிகளில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மூடு அளவிற்கு மழைக்கு வாய்ப்புள்ளது.


கோவை, நீலகிரி, திருப்பூர், உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் மற்ற உள் பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கூர்மையான மழையும் பெய்யக்கூடும்.


தமிழக முழுவதும் ஒட்டுமொத்தமாக வெப்பநிலை மிகவும் நன்றாக இருக்கும். இந்த இரண்டு நாட்கள் வெப்பம் இல்லாமல் குளுமையான சூழலை மகிழுங்கள் என பதிவிட்டுள்ளார்‌.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

கல்லறை தேடுகிறது!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)

news

உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்