சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் நவம்பர் 16ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். அதேசமயம், இந்த மழை மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுமெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் வடக்கடலோர பகுதிகளான சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
புதுச்சேரிக்கு நல்ல மழை

நேற்று இரவு முதல் கடலூர், பாண்டிச்சேரி, அரியலூர், மயிலாடுதுறை, போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது டெல்டா பகுதிகளுக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றின் குவிப்பு அந்த பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வந்ததால் நேற்று கடலூர் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது.
தற்போது அப்பகுகளில் அடர்ந்த மேகங்கள் மேலும் நீடித்திருப்பதால் கடலூர், பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்து வருகிறது. இதனை ஒட்டிய உள் மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று வட தமிழக பகுதிகளில் காற்றின் குவிப்பு இருந்ததால் அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.
தென் - உட்புற மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
இந்த காற்றின் குவிப்பு இன்று உள் மாவட்டங்களில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும்போது உள்பகுதிகளான கோயம்புத்தூர்,நீலகிரி, ஈரோடு, மற்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. காற்றின் குவிப்பு எப்பொழுதெல்லாம் உள் மாவட்டங்களில் செல்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆங்காங்கே பெரிய மழையாக இல்லாமல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளைக்குள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்கள், கோவை ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று காலை நேரத்தில் மழைக்கு ஒரு பிரேக் இருக்கும். இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு இல்லை. 50 மி.மீ,60 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்தால் கூட அந்த மழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இது போன்ற மழை இன்று இரவு முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை இரண்டு மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பெய்யக்கூடும். இந்த மழை என்ஜாய் பண்ணக்கூடிய மழையாகவே இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}