சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் இதே நிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலும், உள் மாவட்டங்களிலும், கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவுகிறது. நேற்று அதிகபட்சமாக திருப்பூரில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ஆட்சியர் அலுவலகம், ஊத்துக்குளியில் தலா 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று போலவே இன்றும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில் அவர் கூறியதாவது,
கோவையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனமழை:
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் ஒருமுறை அமோக மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோயம்புத்தூரில் கனமழை பெய்தது. ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இன்றும் இதே நிலை தொடரும்.உள்நாடு மற்றும் தென் தமிழகத்திலும் மழை பெய்யும்.
இன்று கனமழை:
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார் .
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}