சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்.. மின் கட்டணம் செலுத்த ..18ஆம் தேதி வரை டைம்!

Dec 13, 2023,01:19 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே 4 மற்றும் 7 ஆம் தேதி மின்கட்டணம் செலுத்த அறிவித்திருந்த நிலையில் வரும் 18ஆம் தேதி வரை அபராத தொகையின்றி  மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது.


டிசம்பர் 3ம் தேதியன்று வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக, சென்னை ,திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ஆகிய நான்கு மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது . இப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து தீவு போலானது . இதனால் மக்கள் மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த மழை வெள்ளத்தில் பல்வேறு பொருட்கள் தண்ணீருக்கு இறையானது.பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்க தமிழக அரசு பல்வேறு மீட்பு  நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டது.




மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடைசி தேதியாக 4.12.23 மற்றும் 7.12.23 ஆகிய தேதிகளில்   அபராத தொகை இன்றி மின் கட்டணம் செலுத்த  அறிவுறுத்தி இருந்த நிலையில் , ஒரு சில பகுதிகளில்  நிலைமையை இன்னும் சீரடையாமல் இருந்து வருகிறது.தற்போது பல்வேறு பகுதியை சேர்ந்த நலிவடைந்த  மக்களால் மின்சார கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.


இந்நிலையில் தற்போது இந்த நான்கு மாவட்டங்களுக்கும் வரும் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த அறிவிப்பு நான்கு மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அழியா காதலில் நீயும் நானும்

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

காலம் பொன் போன்றது

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!

news

சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!

news

World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்