- கலைவாணி கோபால்
சுமார் 1110 வருடங்களுக்கு முன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரிய கோயில் அதாவது பெருவுடையார் கோவில் மாமன்னர், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. ஒருமுறை ராஜராஜ சோழன் தஞ்சையில் உள்ள சிவன் கோயிலில் எல்லா மக்களும் விளக்கு போட தற்போது உள்ள செயற் குழு கூட்டம் போல அப்போது ஒரு கூட்டம் கூட்டப்பட்டு, அதில் சாதாரண மக்களுக்கு விளக்கு போடும் வகையில் அவர்களுக்கு ஆடு மாடுகளை பரிசளித்து அதில் வரும் வருமானத்தை ஈட்டிக்கொண்டு தந்தை பெருவுடையார் கோயிலில் விளக்குகள் என்பது தடையும் இல்லாமல் தீபம் போடுவதற்காக ஆடு மாடுகளை பரிசளித்தார்.
ஒருமுறை இராஜராஜ சோழன் கோயிலின் வரும் போது ஒரு விளக்கு மட்டும் ஏற்றப்படாமல் இருந்தது., அதுக்கு காரணம் யார் யாருடைய விளக்கு ஏற்றப்படாமல் இருக்கிறது அந்த நபர் யார் என்பதை கேட்டு தெரிந்து கொண்டார். பின் நேரடியாகவே அந்த அந்த நபரின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு ஒரு சிறு ஓலை குடிசை மட்டுமே இருந்தது
அந்த வீட்டின் கதவை தட்டிய போது ஒரு மெலிந்த பெண்மணி வந்து கதவை திறந்தாள். அவளிடம் ஆடு மாடுகளை கொடுத்தும் தீபம் போடாமல் இருப்பது ஏன் என கேட்கும் போது, அப்பபெண்ணின் பதில் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. அப்பெண் அளித்த பதிலாவது, நான்கு மாதங்களுக்கு முன் வந்த காவிரி ஆற்று வெள்ளத்தில், நீங்கள் கொடுத்த ஆடு மாடுகள் அனைத்தும் அடித்துச் சென்று விட்டன. அதைக் காப்பாற்ற சென்ற என் கணவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
எனக்கு குழந்தை பிறந்து நான்கு மாதங்களே ஆன பொழுதும், என் தாய்ப்பாலை விற்று அதில் வரும் வருமானத்தை ஈட்டி விளக்கு போட்டு வந்தேன். இப்போது என் தாய்ப்பால் சுரப்பு நின்று விட்டது, இதனால் , விளக்கு போட இந்த வருமானமும் இல்லை அதனால் விளக்கு போட முடியவில்லை என்று பதில் அளித்தாள்.
இது கேட்டு ராஜராஜன் மனம் கலங்கியது, அவருக்கு பேச வார்த்தைகளே இல்லை. என் பெயர் இருக்கும் வரை உன் பேரும் கல்வெட்டில் பொறிக்கப் பெறும் என்று ராஜராஜ சோழன் அறிவித்தார். அதன்படி தனது கோவில் கல்வெட்டில் அப்பெண்ணின் பெயரும் இடம்பெறச் செய்தார்.
"தாய்ப்பால் விற்ற காசு விளக்கு எரித்த எழுவத்தூர் நாராயண் வரகுணா" என்று பொறிக்கப்பட்டுள்ளது. அப் பெண்ணிற்கு தன் அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலையில் அமர்த்தி, அவர் குழந்தையை வளர்க்கும்பொறுப்பை அரண்மனை ஏற்கும் என்ற வாக்குறுதியும் அளித்தார்.
இன்றளவும் தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் அப்பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}