சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 17, 18, 19ம் தேதிகளிலும், ஏப்ரல் 21ம் தேதி மகாவீரர் ஜெயந்தியன்றும், மே 1ம் தேதி மே தினம் அன்றும் மற்றும் ஜுன் 4 ஆகிய ஆறு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளதால் மதுப்பிரியர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழக மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்குப் எண்ணிக்கை நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையம் உத்தரவின் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மட்டுமல்லாமல் மொத்தம் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளது. எப்படி தெரியுமா?
தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளான ஏப்ரல் 17, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 18, வாக்குப் பதிவு தினமான ஏப்ரல் 19 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 21ம் தேதி மகாவீரர் ஜெயந்தி வருகிறது. அன்றும் கடை லீவு. இதைத் தொடர்ந்து மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி அன்றும் மதுக் கடைகளுக்கு லீவு விடப்படும். அதன் பிறகு ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையன்றும் லீவு விடப்படும்.
அடுத்தடுத்து 6 நாட்களுக்கு கடை விடுமுறை வருவதாலும், தொடர்ந்து 3 நாட்கள் இந்த மாதம் லீவு வருவதாலும் மதுப் பிரியர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். அதற்காக சும்மாவா இருக்கப் போகிறார்கள்.. முன்கூட்டியே ஸ்டாக் வாங்கி வைக்காமல் இருப்பார்கள்.. இந்த லீவு விடற அன்னிக்காச்சும் கொஞ்சம் குடிக்காம இருக்கலாம்ல..!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}