Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

Nov 22, 2024,03:10 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: கோவைப்பழம் கிளிக்கு சூப்பரா பிடிக்கும்.. கோவக்காய் நமக்கு சூப்பரான உணவு.. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கோவக்காய் நல்ல பலன் தரும்னு சொல்வாங்க.. அப்படிப்பட்ட கோவக்காயுடன், வேர்க்கடலையையும் சேர்த்து ஒரு அட்டகாசமான டிஷ் பண்ணலாம்  தெரியுமா.. தெரியாட்டி கவலைப்படாதீங்க.. நாங்க சொல்லித் தர்றோம்.. வாங்க கிச்சனுக்கு ஓடலாம்!


தேவையான பொருட்கள் :




1. கோவக்காய் - 1 கப் (கழுவி நறுக்கியது)

2. வேர்க்கடலை (பச்சை) - dry roast செய்து மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்

3. சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)

4. பூண்டு - 3 பல் (நறுக்கியது)

5. எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, மல்லித்தழை - தாளிக்க

6. மிகாய் தூள் - 1/2 ஸ்பூன்

(உப்பு, காரம் தேவைக்கு ஏற்ப)


செய்முறை :


1. கோவக்காயை கழுவி நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2. குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. அதே குக்கரில் சின்ன வெங்காயம், கோவக்காய், மிளகாய் தூள், பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறி விட வேண்டும்.

4. 1/4 கப் தண்ணீர் தெளித்து விட்டு குக்கரை ஒரு விசில் விட்டு வேக வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

5. பிரஷர் அடங்கியதும் வேர்க்கடலை பொடி, மல்லித்தழை, தாளித்து வைத்தது ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கிளறினால் சுவையான கோவக்காய் வேர்க்கடலை பொரியல் ரெடி.


நன்மைகள் :


கோவக்காய் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு. தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் 100 கிராம் இதனை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடல் எடை குறையும். இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்ற உணவாகும். கோவக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட் சத்துக்கள், பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி 1, பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளதால் இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்