டில்லி : பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா நேற்று இரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் காலமானார். இவர் டாடா குழுமத்தின் தலைவர் என்பது மட்டும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் உலகின் மிகப் பெரிய பணக்காரர், தொழிலதிபர் என்பதை தாண்டி உலகத்தையே வியக்க வைக்கக் கூடிய மாமனிதர் ரத்தன் டாடா என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாது.
ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் கீழ் தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்தியர்கள் தினசரி வாழ்வோடு ஒன்றாக கலந்தவர் ரத்தன் டாடா என்பது பலருக்கும் தெரியாது. வருடத்திற்கு கோடிக் கணக்கில் லாபம் மட்டும் சம்பாதித்து, மேலும் மேலும் கோடிகளில் சொத்து சேர்க்கும் தொழிலதிபர்களை மட்டும் தான் நாம் பார்த்து, தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக மட்டுமே பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு வந்தவர் தான் ரத்தன் டாடா.
.jpg)
டாடா குழுமம் சம்பாதித்த வருமானத்தில் பெருமளவை தானமாகவும், நன்கொடையாகவும்தான் செலவிட்டுள்ளார் டாடா. அதாவது நம்மிடம் பெற்ற பணத்தை நமக்கே கொடுத்து வந்த மனித நேயர் ரத்தன் டாடா.
சிறந்த தொழிலதிபராக மட்டுமின்றி, சிறந்த மனிதராகவும் வாழ்ந்து விட்டு சென்ற ரத்தன் டாடா இன்று நம்முடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமக்கே தெரியாமல் நம்முடைய தினசரி வாழ்க்கையின் அங்கமாக டாடா குழுமம் இந்தியர்களின் வாழ்வில் இருந்து கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
ஆம். நாம் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு துவங்கி, வானத்தில் பறக்கும் விமானம், சொகுசு கார் வரை அனைத்தும் டாடா இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து தொழில்களிலும் டாடா குழுமம் தடம் பதித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ரத்தன் டாடா எப்படி இந்தியர்களின் வாழ்வோடு கலந்து இருக்கிறார் என்பதை டாடா குழுமத்தின் தொழில்களின் பட்டியலே சொல்லும். டாடா குழும தொழில்களின் பட்டியல் இதோ...
டாடா குழும தொழில்களும், இந்தியர்களின் வாழ்வும்
டாடா மோட்டார்ஸ் - வாகனங்கள்
டாடா உப்பு - உப்பு
டாடா காபி - காபி
டாடா பவர் - மின்சாரம்
டாடா டெக்னாலஜிஸ் - தொழில்நுட்பம்
வோல்டாஸ் - மின்சாதன பொருட்கள்
நெல்கோ - செயற்கைகோள் துறை
டாடா டெலிசர்வீசஸ் - தொலை தொடர்பு
டாடா டீவோ - கனகர வாகனங்கள்
டாடா கெமிக்கல்ஸ் - விவசாயம்
டிசிஎஸ் - ஐடி துறை
டாடாஸ்கை - டிவி
டைட்டன் - கை கடிகாரம்
ராலிஸ் இந்தியா - விவசாய உரங்கள்
இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் - ஹோட்டல்
டாடா ஹிஸ்பானோ - ஆப்பிரிக்க பஸ் தயாரிப்பு
டாடா கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் - தினசரி உபயோகப் பொருட்கள்
டாடா ஸ்டீல் - இரும்பு
டிரென்ட் - உடைகள்
ஜாக்குவார் லேண்ட் ரோவர் - சர்வதேச கார் தயாரிப்பு
ஏர் இந்தியா - விமானம்
இது வெறும் சாம்பிள் தான் இன்னும் இருக்கு. டாடா குழுமத்தின் கீழ் மொத்தமாக 30 கம்பெனிகள், தொழில்கள் நடந்து வருகிறது. இது தற்போதுள்ள சொத்து நிலவரம் தான். இது தவிர இதற்கு முன் டாடா நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஏர் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்திய அரசுக்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் ஏர் இந்தியா, டாடாவிடமே வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}