மும்பை: ரத்தன் டாடா மறைந்த சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவரது மிகப் பெரிய கனவுகளில் ஒன்றான டாடா நானோ காரை மீண்டும் கையில் எடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
நடுத்தர வர்க்கத்தினரின் சொந்தக் கார் கனவை நனவாக்கியவர் ரத்தன் டாடா. டூவீலரில் கணவன், மனைவி, குழந்தைகள் என சிரமப்பட்டுப் போகாமல் அவர்களும் காரில் ஜம்மென்று பயணிக்க வேண்டும் என்பதற்காகவே நானோ காரை உருவாக்கினார் ரத்தன் டாடா. மக்களின் கார் என்று புகழப்பட்ட அந்தக் காரின் ஆரம்ப விலை ரூ. 1 லட்சம்தான். மிகப் பெரிய அளவில் இது மக்களின் இதயத்தைத் தொட்டாலும் கூட பல்வேறு காரணங்களால் இதன் தயாரிப்பை தொடர முடியாமல் அதை நிறுத்தி விட்டது டாடா மோட்டார்ஸ்.
இந்தியாவின் மலிவு விலை கார்
இந்தியாவின் மலிவு விலை காராக அறியப்பட்ட நானோவுக்கு மக்கள் மனதில் இன்னும் கூட நீங்காத இடம் உள்ளது. இப்போது தயாரிப்பில் இல்லாவிட்டாலும் கூட இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் பழைய நானோ கார்களைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் ரத்தன் டாடாவை நினைக்க மறப்பதில்லை. அந்த அளவுக்கு மக்கள் மனதைக் கவர்ந்த அந்த நானோ மீண்டும் மறு பிறவி எடுக்கவுள்ளது.
நானோ காரில் சில மாற்றங்களைச் செய்து நவீனமாக்கி அதை மீண்டும் களத்தில் இறக்கத் திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். கார் டிசைன், நவீன வசதிகள், பயணிப்போருக்கு மேலும் வசதிகள் என பக்காவாக உருமாற்றம் பெற்றுள்ளது புதிய நானோ கார்.
மாடர்னாக மாறிய வெளிப்புறம்
முந்தைய நானோ காரை பெரிய ஆட்டோ என்றுதான் பலரும் அழைத்தனர். ஆனால் தற்போதைய புதிய காரின் வெளிப்புறம் சூப்பராக மாற்றப்பட்டுள்ளது. நவீனமான முறையில் பார்க்கவே படு லுக்காக இருக்கிறது. எலிகன்ட் லுக்கைக் கொடுத்துள்ளனர். ஹெட்லைட் நவீனமாகியுள்ளது. காரின் மொத்த வெளித்தோற்றமும் ஸ்டைலிஷாக காட்சி தருகிறது. கார் சின்னது என்பதால் பார்க்கிங் பிரச்சினை கிடையாது. டிராபிக்கிலும் கூட புகுந்து புகுந்து போய் விடக் கூடியது என்பதால் நானோ கார் மக்கள் மனதைக் கவரும் என்று டாடா மோட்டார்ஸ் நம்புகிறது.
புதிய காரில் 624 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் காரின் எரிபொருள் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்குமாம். தினசரி காரைப் பயன்படுத்துவோருக்கு இது மிகவும் சிக்கனமானது. திறனும் மேம்படுத்தப்பட்டு, மைலேஜும் அதிகரித்திருப்பதால் எக்கனாமிக்கலாக இருக்கும். மேலும் மணிக்கு 105 கிலோமீட்டர் வேகம் வரை போக முடியுமாம். அந்தளவுக்கு காரில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கப்ட்டுள்ளது. சிட்டி ரோடுகள் மட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளிலும் கூட செல்லும் வகையில் காரின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பவர் விண்டோஸ் - ஏசி வசதி
பவர் விண்டோஸ், குளிர்சாதன வசதி, நவீன மியூசிக் சிஸ்டம் ஆகியவை காரின் உட்பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும். இதனால் காரை ஓட்டுபவர்களுக்கும், பயணிப்பவர்களுக்கும் சொகுசான அனுபவம் கிடைக்கும். சீட்டுகளையும் கூட மாற்றியமைத்துள்ளனர். டிரைவர் உள்பட நான்கு பேர் சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும். அதற்கேற்றார் வகையில், லெக்ரூம்களையும் கூட விஸ்தரித்துள்ளனர். இதனால் பயணம் எளிதாகவும், சவுகரியமாகவும் இருக்கும்.
முந்தைய நானோ காரில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு மெட்டீரியல்கள், பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியிருந்தன. அந்தக் குறையை தற்போது சரி செய்து நவீன பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனராம். இதனால் பாதுகாப்பு குறைபாடுகள் சரி செய்யப்பட்டிருப்பதாகவும், சவுகரியமான, பாதுகாப்பான பயணத்திற்கு புதிய நானோ உத்தரவாதம் அளிப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.
விலை ஜஸ்ட் ரூ. 2.50 லட்சம்தான்
விலையும் பெரிதாக உயர்த்தப்படவில்லை. ஆரம்ப விலை ரூ. 2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே விலை குறைந்த கார் என்ற பெருமையை நானோ தக்க வைத்துள்ளது. காரை ரொக்கமாகவும் வாங்கலாம், மாதத் தவணையிலும் வாங்க முடியும் என்பது கூடுதல் சந்தோஷச் செய்தி.
ரத்தன் டாடாவை மக்கள் நினைவு கூர்ந்து வரும் நிலையில் அவரது நானோ காரை மீண்டும் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதற்கு தற்போது உயிர் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்தக் கார் விற்பனைக்கு வரும்போது இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் மீண்டும் ஒரு புரட்சி அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் இப்போதே படு ஆர்வமாக உள்ளனர் புதிய நானோவை வீட்டுக்கு அழைத்து வர.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}