பெங்களூர்: இதுவரை ஒர்க் பிரம் ஹோம் மற்றும் ஆபீஸ் என கலவையான வேலை வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கி வந்த டிசிஎஸ் நிறுவனம் தற்போது ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை ரத்து செய்து விட்டது. இனிமேல் அலுவலகத்திற்கு வந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு இருந்த உலகம் வேறு.. அதற்குப் பிறகு நாம் இப்போது பார்க்கும் உலகமே வேறு. கொரோனா வந்து உலகையே புரட்டிப் போட்டு விட்டது. அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பல நடைமுறைகள் இன்று வழக்கொழிந்து போய் விட்டன. புதிய இயல்புகளை உலகம் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டது.
அதில் ஒன்றுதான் ஒர்க் பிரம் ஹோம். கொரோனாவுக்கு முன்பு வரை ஒர்க் பிரம் ஹோம் என்றால் என்ன என்று கூட பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஆனால் கொரோனா வந்து ஒர்க் பிரம் ஹோம் என்பதை அத்தியாசத் தேவையில் ஒன்றாக மாற்றி விட்டது.
கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்கள் ஒர்க் பிரம் ஹோம் மோடுக்கு மாறின. குறிப்பாக ஐடி நிறுவனங்கள். அதன் பிறகு அது புதிய இயல்பாகி விட்டது. இன்று வரை ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் ஐடி நிறுவனங்கள் பலவற்றில் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நிறுவனமாக இதை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளன.
அந்த வரிசையில் இந்தியாவின் நம்பர் 1 ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் ஹைபிரிட் மாடல் வேலையை ரத்து செய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது. தற்போது வாரம் 3 நாட்கள் அலுவலகத்திலும், பிற நாட்கள் வீட்டிலுமாக வேலை பார்க்க அது அனுமதி வருகிறது. அதை மாற்றி இனி வாரத்தின் 5 பணி நாட்களிலும் அலுவலகத்திலேயே வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
சங்கடஹர சதுர்த்தி.. விநாயகப் பெருமானை வழிபட கஷ்டங்கள் யாவும் அறுபட்டுப் போகும்!
தொடர்ந்து 4வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்வு... இன்றைய விலை நிலவரம் இதோ!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
{{comments.comment}}