சென்னையில் இன்று முதல் டீ,காபி விலை உயர்வு.. அச்சச்சோ.. குடிக்காம இருக்க முடியாதே!

Sep 01, 2025,06:23 PM IST
சென்னை : சென்னையில் இன்று முதல் கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாமாணிய மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.10 மற்றும் ரூ.12 ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்படுவதாகவும், காபி விலை 15ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாகவும் டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை, டீ மற்றும் காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகரித்திருப்பதால் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரில் டீ காபிக்கு அடிமையானவர்கள்தான் அதிகம். வேலை பார்க்கும்போது இடை இடையே டீ சாப்பிடாமல், காபி சாப்பிடாமல் கூடவே வடை பஜ்ஜி போண்டா என்று ஸ்னாக்ஸ் சாப்பிடாமல் பலருக்கும் இருக்க முடியாது. நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இது மாறி விட்டது.





டீக் கடைகள் இப்போது அதிக அளவில் உள்ளன. இது ஒரு பெரிய பிசினஸாகவும் உள்ளது. குழுமங்களாக இப்போது டீ விற்பனை நிலையங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டீ காபி விலை அதிகரிப்பு பலருக்கும் குறிப்பாக அன்றாட வேலை பார்ப்போருக்கும், அலுவலகம் செல்வோருக்கும் பெரும் இடியாக வந்து சேர்ந்துள்ளது.

ஆங்காங்கு மதுக் கடைகளை அரசு திறந்து வைத்திருப்பது போல மக்கள் நலனுக்காக பேசாமல் டீக் கடைகளையும் கூட திறந்து வைத்து சலுகை விலையில் டீ காபி விற்பனை செய்யலாம். அல்லது ஆவின் பார்லர்களில் இனிமேல் சலுகை விலையில் டீ காபி விற்பனை செய்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

news

சித்திரையும் வெயிலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்