ஆசிரியர் தினம்: பூ கொடுத்து கொண்டாடிய தேவகோட்டை மாணவர்கள்!

Sep 05, 2023,05:00 PM IST
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

ஆசிரியர் தின விழாவில் மாணவர்- மாணவிகள் ரோஜா பூ , பூங்கொத்து கொடுத்து ஆசிரியர் தின விழா வாழ்த்து தெரிவித்தனர்.



"ஆசிரியர் பணியே அறப்பணி" என்ற பழமொழிக்கேற்ப ஆசிரியர் பணி மிகவும் சிறப்பானது. ஒரு குழந்தைக்கு வெறும் கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பது என்பது ஆசிரியர் பணி கிடையாது.
நல்ல கல்வியை தாண்டி ஒரு குழந்தைக்கு ஒழுக்கம், நடத்தை ,பொதுஅறிவு, சுத்தம் ,அறிவு மற்றும் ஆன்மீகம் என எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதை ஆசிரியரின் சிறப்பான பணியாகும். 

அந்த ஆசிரியர் பணியை அறப் பணியாக நினைத்த சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை (செப்டம்பர் 5 ) நாம் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.



மேலும் தமது வாழ்க்கை மேம்பட உதவிய ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் உலக நாடுகளில் ஆசிரியர் தின விழாவை மாணவ, மாணவிகள் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த சிறப்புமிக்க ஆசிரியர் தின விழா இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்க, தலைமை ஆசிரியர் 
லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து அட்டை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் . மேலும் ரோஜா பூ கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பு செய்தனர்.



மூன்றாம் வகுப்பு படிக்கும்  சபரிவாஷன் என்ற மாணவன் அரிசியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படம் வரைந்து அனைவரையும் அசத்தினான். ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதற்காக பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆசிரியர் தின விழாவின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் அவர்கள் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர், முத்துலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்