ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில், திருமண நிச்சயதார்த்த விருந்துச் சாப்பாட்டில் நல்லி எலும்பு இல்லாததால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கல்யாணத்தில் கடலை மிட்டாய் போடலை என்று கூறி கலவரமே வெடித்த கதைகளை பலரும் பார்த்திருப்போம்.. அதேபோல "எக்ஸ்ட்ரா அப்பளம் தரலை" என்று கூறி எகிறி எகிறி அடித்துக் கொண்ட கல்யாண வீடுகளையும் பார்த்திருப்போம். இந்த வரிசையில் இப்போது நல்லி எலும்பையும் சேர்த்து விட்டனர்.
தெலங்கானாவில் ஒரு கல்யாண வீட்டில் நல்லி எலும்பு இல்லை என்று கூறி கல்யாணத்தையே மாப்பிள்ளை வீட்டார் நிறுத்திய அக்கப்போர் நடந்துள்ளது.
மாப்பிள்ளை வீடு ஜக்தியால் பகுதியைச் சேர்ந்தவர்கள். பெண் வீடு நிஜாமாபாத் ஆகும். சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து பெண் வீட்டு சார்பில் விருந்து வைத்துள்ளனர். அந்த விருந்தில் கறிக் குழம்பில் நல்லி எலும்பு இல்லையாம். இதைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸார் இரு தரப்பிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கூறுகையில், கறிக் குழம்பில் நல்லி எலும்பு போடாமல் எங்களை அவமதித்து விட்டார்கள். எனவே கல்யாணமே வேண்டாம் என்று கூறினர். இதைக் கேட்டு பெண் வீட்டார் கொதிப்படைந்து விட்டனர். எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் இப்படிக் கூறுவது அராஜகம் என்று அவர்கள் கொதித்தனர்.
இரு தரப்பையும் சமரசப்படுத்த காவல்துறை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தங்களை அவமதித்து விட்டார்கள், இனியும் இந்த வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ள முடியாது என்று மாப்பிள்ளை வீட்டார் பிடிவாதமாக கூறியதால் திருமணம் நின்று போனது.
இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பார்கள்.. இப்படியெல்லாமா சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காக ஒரு நல்ல காரியத்தை நிறுத்துவார்கள் என்று ஆச்சரியம்தான் ஏற்படுகிறது.. ஆனால் இருக்கிறார்களே என்ற நிதர்சனமும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் ஒரு தெலுங்குப் படம் வந்தது. அதன் பெயர் பலகம். அதிலும் இதே போல ஒரு சீன் வரும்.. குழம்பில் நல்லி எலும்பு இல்லாததால் கல்யாணத்தை நிறுத்துவது போல சீன் வைத்திருப்பார்கள்.. அதை இந்த ரியல் மாப்பிள்ளைக் குடும்பம் நிஜமாக்கி விட்டது..!
ஊன்னு நல்லா ஊதி 2 உறிஞ்சு உறிஞ்சி.. நாலு கடி கடிச்சு சுவைச்சுட்டு தூக்கிப் போடப் போற எலும்பு.. அந்த எலும்புக்காக இப்படி ஒரு கோபமா.. திருந்துங்க மேன்!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}