சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை 100 முதல் 104 டிகிரி வரை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெயில் சதத்தை தாண்டும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து மத்தியில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் குளுமையான சூழல் நிலவியது. தற்போது மார்ச் இறுதிக் கட்டத்தில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே சமயத்தில் மதிய வேலைகளில் வெப்ப அலையும் வீசுவதால் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆந்திர கடற்கரைக்கு அருகிலுள்ள வடக்கு மாவட்டங்களான வேலூர்,ராணிப்பேட்டை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று வெப்பமான நாளாக இருக்கும். கடலிலிருந்து வெகு தொலைவில் உள்ள சென்னையின் உட்புறப் பகுதிகளும் கொந்தளிப்பாக இருக்கும்.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கடலோரப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக வேலூரில் இன்றோ அல்லது நாளையோ வெயில் 104° பாரன்ஹீட் வரை பதிவாகும். மதுரை, சேலம், ஈரோடு, கரூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் வெப்பநிலை 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்.
திருச்சி மற்றும் கோவையில் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகலாம் என கூறியுள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெயில் சதத்தை தாண்டும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}