சென்னை: கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தல தோனி. அவர் தனது அட்டகாசமான புது ஹேர்ஸ்டைலில் உள்ள புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஹேர்ஸ்டைலை அடிக்கடி மாற்றுபவர். ஒவ்வொரு ஐபிஎல் மேட்சிலும் ஒவ்வொரு ஹேர் டைலில் வருவது தோனியின் வழக்கம். தோனியின் ஹேர்டைலுக்கு என்றே தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கும். தோனியின் ஆரம்ப கால அடையாளமே அவரது ஹேர்ஸ்டைல்தான்.
தோனியைப் போன்றே ஹேர் ஸ்டைலில் வரும் ரசிகர்களும் உண்டு. ஆண் ரசிகர்களை விட தோனியின் ஹேர்ஸ்டைலுக்கு பெண் ரசிகள்கள் தான் அதிகம். குறிப்பாக, தோனிக்கு சென்னையில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம்.
ஸ்பைக், மிலிட்டரி கட், நறுக் ஹேர்ஸ்டைல், தாடியுடன் உபெர்-கூல் ஃபாக்ஸ்-ஹாக் கட்டிங், நடுவில் அடர்த்தியான ஸ்பைக் சுற்றி குறையான முடி என்று மஹாக் , அதிக முடி வைப்பது, குறைப்பது போன்ற பல வகையில் ஹேர் ஸ்டைலில் கலக்கி வருபவர். 2005ம் ஆண்டில் தோனி, காற்றில் ஆடும் நீண்ட கலரடித்த முடியோடு இருந்தார். இந்த ஹேர்ஸ்டைல் இவருடைய ஹேர் ஸ்டைலிலேயே சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது எனலாம்.
2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவரது நீண்ட கூந்தலை மறைந்த முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் பாராட்டி, அதை வெட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். அந்த அளவிற்கு தோனியின் ஹேர் ஸ்டைல் பேமஸ். பல ஹோ்ஸ்டைலில் வரும் தோனி ICC உலகக் கோப்பை 2011 வெற்றிக்குப் பிறகு மொட்டை தலையுடனும் காட்சியளித்துள்ளார்.
தோனியின் ஒவ்வொரு அசைவையும் மாஸ் ஆக்கி வைரலாக்கி விடுவார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு தோனியின் புதிய ஹேர் ஸ்டைலுடன் ஸ்மார்ட்டாக இருக்கும் லுக் தற்பொழுது வைரலாகி வருகிறது.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}