சென்னை : தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் தற்போது பேசுபொருளாக இருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' (Jana Nayagan) திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில், விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட்டான 'தெறி' (Theri) திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளதால், அவரது 'ஜனநாயகன்' திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சென்சார் விவகாரத்தால் இந்த பட விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது. சென்சார் போர்டும் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறது. மற்றொரு புறம் தயாரிப்பாளர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என தெரியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கவும், திரையரங்குகளுக்குப் புத்துயிர் அளிக்கவும் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்த 'தெறி' படத்தை மறுவெளியீடு (Re-release) செய்யத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனை அந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவே சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, வரும் ஜனவரி 24-ஆம் தேதி 'தெறி' திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத் திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு வெளியாக உள்ளது. 2016-இல் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. இதில் விஜய்யின் மூன்று விதமான பரிமாணங்கள் மற்றும் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. குறிப்பாக, ஜி.வி. பிரகாஷின் இசை இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்.
தற்போது தமிழக அரசியல் களத்தில் பிஸியாக இருக்கும் விஜய்யை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'ஜனநாயகன்' தாமதமானது சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், 'தெறி' போன்ற ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தை மீண்டும் திரையில் கொண்டாடுவது ஒரு திருவிழா போல அமையும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'
தொழில்நுட்பக் கோளாறு...பிஎஸ்எல்வி சி62 செயற்கைகோள் இலக்கை அடையவில்லை... இஸ்ரோ விளக்கம்
கமலஹாசனின் பெயர், போட்டோவை வணிகரீதியாகப் பயன்படுத்த தடை
இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
தேசிய இளைஞர் தினம் (National Youth Day).. யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
மார்கழித் திங்கள் அல்லவா.. வாசலில் விரியும் வாழ்வியல் கலை!
{{comments.comment}}