- முனைவர் தி. தங்கலட்சுமி
சூரியன்
நின்ற இடத்தில் இருந்து கொண்டே
வானில் வர்ணஜால சித்திரம் தீட்டும்
விசித்திரத் தூரிகை – சூரியன்!
--
ஆதவன்
ரம்யமான ரணகளம்
அந்திவானின்
அஸ்தமன ஆதவன்!
--
அந்திவானம்
மேகப் புரவியில் சூரியப் புரவலன்
விரைந்து சென்ற குருச்சேத்திரக் களமாய்
அந்தி வானச் சிவப்பு!
--
பகல் ஒளி

இருந்தாற் போல் இருந்து
சொல்லாமல் கொள்ளாமல்
எங்கு சென்றாயோ?
ஐயோ பாவம்... இருளில் தொலைந்து போனாயோ!
--
தியாகச் செம்மல்
என் இனிய பாதக்குறடே
என்னை உன் உச்சந்தலையில் ஏந்தி
உள்ளங்கால்கள் தேய உழைக்கும்
உயர்ந்த உள்ளம் உடையவனே!
காதலியின் கிள்ளல் வாங்கும்
காதலன் போலப்
பதமான முள்ளைத் தாங்கும்
இதமான இனியவனே!
தனிமையில் தனிவழி நடக்கையில்
உடன்வரும் உற்ற நண்பனே!
கயமைக் கண்கள் நோக்கிக்
கடைவாய் ஏளனம் பேசிக்
கரையான் கைகள் நீண்டால்
என் கைகளாய் அவதரிப்பவனே!
பயணங்கள் தோறும்
என்னோடு பயணிக்கும்
பண்பான பாட்டாளியே!
உன்மேல் என்னைத் தாங்கி
உயிர் கரையும் வரை
உறங்காத உண்மைக் காதலனே!
சப்தங்களற்ற சந்திலும் என்னோடு
சஞ்சரிக்கும் சப்த ஸ்வரமே!
குதிரைக்கு லாடம் போல்
எனக்கு நீ,
சந்திரனோ தேய்ந்து வளரும்
நீயோ தேய்ந்து எனை வளர்த்தாய்
நீயல்லவோ தியாகச் செம்மல்!!!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}